புதுச்சேரி : பாரதியார் பல்கலை கூடத்தில் இரு தினங்கள் நடந்த பாரம்பரிய நாட்டுப்புற நடன பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில் தமிழக பாரம்பரிய நாட்டுப்புற நடனம் பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் நடந்தது. இதில், பல்கலைக்கூட மாணவ, மாணவிகள் 50 பேர் பயிற்சி பெற்றனர்.
அவர்களுக்கு நேற்று நடந்த நிறைவு விழாவில், பல்கலைக்கூட முதல்வர் போஸ் சான்றிதழ் வழங்கினார். நாட்டிய துறை தலைவர் விசித்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.