விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கணேசன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர்கள், உதவி பேராசியர்கள் மற்றும் 200 மாணவிகள் பங்கேற்றனர். புள்ளியியல் ஆய்வாளர் சிவக்குமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பேசினர்.
கூட்டத்தில், மாணவிகளுக்கு சமூக நீதி, மனித உரிமைகள், வன்கொடுமை தடுப்பு, போதை மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்பு, இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Advertisement