புதுச்சேரி : பொதுத் தேர்வையொட்டி முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஆண்டுதோறும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல முறையில் எழுத வேண்டி சிறப்பு பூஜை மற்றும் ேஹாமங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பொதுத்தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 20ம் ஆண்டு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே,பொதுத்தேர்வு நாட்களில் காலை 10.30 மணி முதல் மாணவர்கள் பெயர், நட்சத்திரம்,ராசி ஆகியவற்றை சங்கல்பம் செய்து லட்சுமி ஹயக்கீரிவருக்கு சகஸ்ரநாம அர்ச்னை செய்யப்படும்.
இது குறித்து கோவில் தனி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் தேர்வு நாட்களில் லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நடக்கும் சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்பவர்களுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை புத்தகம், ஹயக்ரீவர் என எழுதும் புத்தகம், வெள்ளி டாலர், எழுது பொருள், தேன் பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 90954-28302 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.