விழுப்புரம் : மினி சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர் கார் மோதி இறந்தார்.
கடலுார் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 48; இவர், நேற்று முன்தினம் மேல்மலையனுார் கோவிலுக்குச் சென்றுவிட்டு, மினி சரக்கு வேனில், சென்னை - திருச்சி மார்க்கமாக வந்தார்.
மினி சரக்கு வாகனத்தின் பின்னால் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு துாங்கியபடி வந்தவர், விழுப்புரம் பைபாசில், திருவாமாத்துார் கூட்ரோட்டில் தவறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ராமசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ராமசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.