சாத்துார்-சாத்தூர் அருகே சூரங்குடியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருநெல்வேலி தாமிரபரணியிலிருந்து சாத்துார் சுற்று கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் ஓ.மேட்டுப்பட்டி, புது சூரங்குடி, பந்துவார்பட்டி, நடுச் சூரங்குடி, அச்சங்குளம், உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஓ.மேட்டுப்பட்டி - வெம்பக்கோட்டை ரோட்டில் குரங்குடி ஓடை பாலம் அருகில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் கடந்த ஒரு வாரமாக உடைந்து குடிநீர் வீணாக இப்பகுதியில் உள்ள கண்மாயில் சென்று சேர்ந்து வருகிறது.
இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இனியும் தாமதம் இன்றி உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.