மாவட்டத்தில் பெரும்பாலான நகர், ஊராட்சி பகுதிகளில் சாக்கடைகளில் மனிதக்கழிவுகள் விடப்படும் அவலம் நீடிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் தனிநபர் கழிப்பறை ,செப்டிக் டேங்க் அமைப்பதற்கு மானியங்கள் வழங்கப்பட்ட போதும் ஊராட்சி பகுதிகளில் இன்னும் திறந்தவெளியில் இயற்கை உபாதை புரிவது, வீடுகளில் கட்டப்படும் கழிப்பறைகளில் செப்டிக் டேங்க் வசதியின்றி அவற்றை நேரடியாக தெருவோர சாக்கடைகளில் விடும் நிலை உள்ளது.
கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதிகளில் உள்ள 15 ஊராட்சிகளிலும் இதுபோன்ற சூழல் உள்ளது. முகம் சுளிக்கும் வகையில் இது போன்ற செயல்கள் அரங்கேறுவது தடுக்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் இது போன்ற பிரச்னைகளை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திறந்தவெளி சாக்கடைகளில் விடப்படும் மனித கழிவுகளை அகற்றுவதில் துாய்மை பணியாளர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
இனிவரும் காலங்களில் அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்தி திறந்த வெளியில் விடப்படும் நிலையை தவிர்க்க வேண்டும்.