சென்னை: கேரளா மாநிலம் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரயில்களின் சேவையை நீட்டிக்கும்படி, பயணியர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, சிறப்பு ரயில்களை மார்ச் வரை நீட்டித்து இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து, மார்ச், 4, 11, 18, 25ம் தேதிகளில் மதியம், 1:10மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை, 5:40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.வேளாங்கண்ணியில் இருந்து மார்ச், 5, 12, 19,26ம் தேதிகளில் மாலை, 6:40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை, 11:40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.