வீட்டு உணவை டெலிவரி செய்யும் சொமேட்டோ: ஓட்டல்கள் அதிர்ச்சி

Updated : பிப் 24, 2023 | Added : பிப் 24, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்துள்ள ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், பெருநகரங்களில் இருந்து நடுத்தர நகரங்கள் வரை விரிந்துள்ளது. வாடிக்கையாளர்களை தக்க வைக்க உணவு டெலிவரி நிறுவனங்கள் புது புது திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் சொமேட்டோ நிறுவனம் ரூ.89 ஆரம்ப விலையில் இருந்து வீட்டில் சமைத்த உணவுகளை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Zomato, HomeFood, Hotel food, சொமேட்டோ, ஓட்டல் உணவு, வீட்டு உணவு, Online Food, Online Food Delivery,

கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்துள்ள ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், பெருநகரங்களில் இருந்து நடுத்தர நகரங்கள் வரை விரிந்துள்ளது. வாடிக்கையாளர்களை தக்க வைக்க உணவு டெலிவரி நிறுவனங்கள் புது புது திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் சொமேட்டோ நிறுவனம் ரூ.89 ஆரம்ப விலையில் இருந்து வீட்டில் சமைத்த உணவுகளை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெருநகரங்களில் அலுவலகம் செல்லும் இளைஞர்கள், ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாரத்தில் சில நாட்களாவது ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்பை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்கின்றனர். சில ஓட்டல்கள் மட்டுமே சுத்தம், சுகாதாரத்தை கடைப்பிடித்து சுவையான உணவை வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளன. பல ஓட்டல்கள் கல்லா பெட்டி நிரம்பினால் போதும் என்ற மனநிலையில் தான் உள்ளனர். ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டு அதனை எடுத்துக் கூறினால் கண்டும் காணாதது போல் இருப்பர். இதனால் வயிற்றைக் கெடுக்காத வீட்டு உணவுகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. இதனை அறிந்து 'சொமேட்டோ எவரிடே' என்ற திட்டத்தை அந்நிறுவனம் துவங்கியுள்ளது.


latest tamil news

அத்திட்டம் பற்றி சொமேட்டோ நிறுவனம் “எங்களது உணவு பார்ட்னர்கள் வீட்டு செப்களுடன் இணைந்து சுவையான ரெசிபியை வீட்டு முறையில்அக்கறையுடன் தயாரித்து சில நிமிடங்களில் வழங்குவர். அதற்கென தரமான உணவுப் பொருட்கள் தேர்வு செய்வதை உறுதி செய்து, ஒவ்வொரு உணவையும் நல்ல சுவையில் மட்டுமின்றி, உயர்தரத்திலும் வழங்க உள்ளோம். சொமேட்டோ மெனு மூலம் உங்களது உணவை கஸ்டமைஸ் செய்துக் கொள்ளலாம்” என கூறியுள்ளனர்.

இந்த வீட்டில் செய்யும் உணவின் விலை ரூ.89-ல் இருந்து துவங்குகிறது. முதல் கட்டமாக டில்லிக்கு அருகே உள்ள குருகிராம் நகரில் மட்டும் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த புதியத் திட்டத்தை காரணம் காட்டி, 10 நிமிடத்தில் டெலிவரி என்ற செயல்படுத்த முடியாத திட்டத்தை சொமேட்டோ தூக்கிவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

Jayaprakash krishnan - Madurai,இந்தியா
03-மார்-202304:09:52 IST Report Abuse
Jayaprakash krishnan வீட்டிலிருக்கும் பெண்களுக்கு இது நல்ல திட்டம்
Rate this:
Cancel
katharika viyabari - coimbatore,இந்தியா
28-பிப்-202317:59:44 IST Report Abuse
katharika viyabari ஹோட்டலில் சாப்பிட போகிறவர்கள் ஹோட்டலின் சமையலறைக்கு சென்று ஒரு தடவை பார்த்து விட்டு வந்து சாப்பிடுங்கள்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
25-பிப்-202306:22:11 IST Report Abuse
Godyes எந்த ஓட்டலிலாவது தலை முடியை மறைக்கும் மாஸ்க் அணிகிறார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X