கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்துள்ள ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், பெருநகரங்களில் இருந்து நடுத்தர நகரங்கள் வரை விரிந்துள்ளது. வாடிக்கையாளர்களை தக்க வைக்க உணவு டெலிவரி நிறுவனங்கள் புது புது திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் சொமேட்டோ நிறுவனம் ரூ.89 ஆரம்ப விலையில் இருந்து வீட்டில் சமைத்த உணவுகளை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெருநகரங்களில் அலுவலகம் செல்லும் இளைஞர்கள், ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாரத்தில் சில நாட்களாவது ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்பை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்கின்றனர். சில ஓட்டல்கள் மட்டுமே சுத்தம், சுகாதாரத்தை கடைப்பிடித்து சுவையான உணவை வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளன. பல ஓட்டல்கள் கல்லா பெட்டி நிரம்பினால் போதும் என்ற மனநிலையில் தான் உள்ளனர். ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டு அதனை எடுத்துக் கூறினால் கண்டும் காணாதது போல் இருப்பர். இதனால் வயிற்றைக் கெடுக்காத வீட்டு உணவுகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. இதனை அறிந்து 'சொமேட்டோ எவரிடே' என்ற திட்டத்தை அந்நிறுவனம் துவங்கியுள்ளது.
![]()
|
இந்த வீட்டில் செய்யும் உணவின் விலை ரூ.89-ல் இருந்து துவங்குகிறது. முதல் கட்டமாக டில்லிக்கு அருகே உள்ள குருகிராம் நகரில் மட்டும் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த புதியத் திட்டத்தை காரணம் காட்டி, 10 நிமிடத்தில் டெலிவரி என்ற செயல்படுத்த முடியாத திட்டத்தை சொமேட்டோ தூக்கிவிட்டது.