ஒரகடம்:ஒரகடம் அருகே தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து 20 பெண்கள் உள்பட 23 பேர் நேற்று காயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லம் சிப்காட்டில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இங்கு, பணியாற்றும் 20 பெண் தொழிலாளர்களை ஏற்றி தொழிற்சாலை பேருந்து நேற்று மாலை வண்டலுார்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்றது.
ஒரகடம் அருகே குண்ணவாக்கம் பகுதியை பேருந்து கடந்து சென்றபோது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த 20 பெண் தொழிலாளர்கள், ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று 3 ஆண்கள் காயமடைந்தனர்.
அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த 23 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமமைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.