சென்னை,சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் மற்றும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோரின் தலைமையில், போலீசார் நேற்று 'ஆபரேஷன் நார்கோஸ்' என்ற ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 5வது நடைமேடையில் சந்தேகப்படும் படியாக, ஒரு பெண் நின்றதை போலீசார் கண்டனர். உடனடியாக அவரை மடக்கி பிடித்து பையை சோதனையிட்டனர்.
இதில், 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர் ஒடிசா மாநிலம் பராபூர் பகுதியைச் சேர்ந்த ஜீதா, 35, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.