தார்வாட்-''முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின், கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி, அழிந்து விடும்,'' என சமூக ஆர்வலர் ஹிரேமத் சாபம் விட்டார்.
பா.ஜ., வில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, கல்யாண ராஜ்ய பிரகதி என்ற பெயரில், கட்சியை ஆரம்பித்து உள்ளார். தேர்தலில் கொப்பால் மாவட்டம் கங்காவதியில், அவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் ஹிரேமத் நேற்று தார்வாட்டில் அளித்த பேட்டி:
சுரங்க முறைகேடு வழக்கில் பல்லாரி, ஆந்திராவுக்குள் நுழைய ஜனார்த்தன ரெட்டிக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கு வரவே கூடாது. அவரது கட்சி அழிந்துவிடும். அவரது நண்பர் ஸ்ரீராமுலு தனியாக கட்சி, தொடங்கி என்ன நிலைக்கு ஆளானார் என்று, ஜனார்த்தன ரெட்டி நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.