வாலாஜாபாத்:பூசிவாக்கம்-புத்தகரம் சாலை அபாயகரமான வளைவுகளில், எச்சரிக்கை பலகை இல்லாததால், அடிக்கடி இரவில் விபத்து அரங்கேறும் அபாயம் உள்ளது.
வாலாஜாபாத் அடுத்த, பூசிவாக்கம் கிராமத்தில் இருந்து, கிதிரிப்பேட்டை கிராமம் வழியாக, புத்தகரம் கிராமம் வரையில் செல்லும், 4 கி.மீ., ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலை, சமீபத்தில் புதிதாக போடப்பட்டது.
இந்த சாலையில், எட்டு இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. அவ்வழியே, வேகமாக செல்லும் வாகனங்ககளால் விபத்து ஏற்பட நேரிடுகிறது.
பிரதான சாலையில், அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை இல்லை. இரவு நேரங்களில் மின் விளக்கு வசதி ஆகிய பல வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுவதாக புகார் எழுந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.