திருப்பூர் செஸ்ட் ஹாஸ்பிட்டல், நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் கே.பொம்முசாமி கூறியதாவது:
புகைப்பழக்கத்தால் நுரையீரல் மட்டுமின்றி உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமா, காச நோய் உள்ளிட்ட நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சமீபகாலமாக, புகைப்பழக்கத்தினால் ஏற்படும் நோய் பாதிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் நலன் கருதி, பொது இடங்களில் புகை பிடிப்பதை தவிர்க்கவேண்டும். அரசு உத்தரவை முழுமையாக பின்பற்றும்வகையில் சட்டத்தை கடுமையாக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர், செஸ்ட் ஹாஸ்ப்பிடலில் நுரையீரல் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு தரமான, சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.
Advertisement