காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை அரசு நகரில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், 9.80 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுக் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
அரசு நகர் பகுதி மக்கள் பொதுக் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்ககாக ஆழ்துளைக் குழாயில் அமைக்கப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது
பழுதடைந்த மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பறை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து, பொதுக் கழிப்பறையை பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.