மாங்காடு:மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய நகராட்சி அலுவலக கட்டடம், விளையாட்டு பூங்கா, குளத்தை சீரமைத்து நடைபாதை அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுப்ரமணியன், நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, ரேஷன் கடை முன், பொதுமக்கள் அதிகளவில் நிற்பதை பார்த்து, அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் இருப்பு எவ்வளவு உள்ளது என, கடை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பொருட்கள் வாங்குவோரிடம், அனைத்து பொருட்களும் முறையாக கிடைக்கிறதா என கேட்டார்.