அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சியில் உள்ள அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் கந்தசாமி என்பவரின் கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனுப்பர்பாளையம் கவிதா லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 46 இங்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று வீட்டின் முன்புறம் வெயிலுக்காக போடப்பட்ட தகர சீட்டின் மேல் நின்று பெயின்ட் அடிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது, மின் கம்பத்தில் இருந்து கட்டடத்திற்கு வரும் ஒயரை எதிர்பாராத விதமாக நாகராஜ் பிடித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து, நாகராஜ் அதே இடத்தில் இறந்தார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.