நீட் புதிய வழக்கு ஏன்? அமைச்சர் விளக்கம்!| Why the new case of NEET? Minister explained! | Dinamalar

' நீட் ' புதிய வழக்கு ஏன்? அமைச்சர் விளக்கம்!

Updated : பிப் 25, 2023 | Added : பிப் 25, 2023 | கருத்துகள் (28) | |
சென்னை: 'உச்ச நீதிமன்றத்தில், அ.தி.மு.க., அரசால் தவறாக பதியப்பட்டு நிலுவையில் இருந்த, 'நீட்' தேர்வுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்று, சரியான சட்ட விதிகளின் அடிப்படையில், தி.மு.க., அரசு புதிய வழக்கு பதிவு செய்துள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: 'நீட்' தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த

சென்னை: 'உச்ச நீதிமன்றத்தில், அ.தி.மு.க., அரசால் தவறாக பதியப்பட்டு நிலுவையில் இருந்த, 'நீட்' தேர்வுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்று, சரியான சட்ட விதிகளின் அடிப்படையில், தி.மு.க., அரசு புதிய வழக்கு பதிவு செய்துள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.latest tamil news


அவரது அறிக்கை: 'நீட்' தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், சட்ட விதிகளை ஆராயாமல், அவசர கோலத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, 2020 ஜன., 4ல், அ.தி.மு.க., அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


தவறான சட்டப் பிரிவுகளின்படி தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்தினால், அது, 'நீட்' தேர்வுக்கு எதிரான நம் போராட்டத்துக்கும், நம் மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என, சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.


எனவே, உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யவும், அ.தி.மு.க., ஏற்கனவே தவறான சட்ட விதிகள் அடிப்படையில் தாக்கல் செய்து, நிலுவையில் இருக்கும் வழக்கை திரும்பப் பெறவும் முடிவெடுக்கப்பட்டது.


இதற்கு செயல்வடிவம் தரும் வகையில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டு உள்ளது.தமிழக அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், மத்திய அரசின் பாதகமான சட்ட விதிகளை எதிர்த்தும், புதிய வழக்கு தொடர்ந்து, உரிய மனுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


அ.தி.மு.க., அரசின் தவறான வழக்கை திரும்ப பெற்றதை, ஏதோ நீட் தேர்வு வழக்கையே திரும்ப பெற்று விட்டது போலவும், தி.மு.க., அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கை மறைத்து, திசை திருப்பும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது.


latest tamil news


நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவது மட்டு மின்றி, பொருளாதார நிலையிலும், சமூக நீதி அடிப்படையிலும், பின் தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட, நீட் தேர்வை அகற்ற, கொள்கை பிடிப்புடனான சட்டப் போராட்டத்தை, தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வென்றெடுக்கும். இவ்வாறு, சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X