ஆர்.கே.பேட்டை: திருத்தணி கோட்ட கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமையில் நேற்று, ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டியில், ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முகாம் நடந்தது.
'ராஷ்டிரிய கோகுல் மிஷன்' திட்டம் சார்பில் நடந்த இந்த முகாமில், கால்நடை வளர்ப்பு மற்றும் காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
ஆண்டுக்கு ஒரு கன்று என்பது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
மேலும், 'கோபால் ரத்னா' விருது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆற்றுப்படுத்துதல் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.