சேதமடைந்த தார்ச்சாலை
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு கோவில் நிர்வாகம் தார்ச்சாலை அமைத்துள்ளது. இச்சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், மலைப்பாதையை முறையாக கோவில் நிர்வாகம் பராமரிக்காததால் பல பகுதிகளில் சாலை சேதமடைந்து உள்ளன.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது பக்தர்கள் தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பக்தர்கள் நலன்கருதி மலைக்கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.
- -எஸ்.குமரவேல், திருத்தணி.