சோழவரம்: சோழவரம் அடுத்த, சோலையம்மன் நகரைச் சேர்ந்தவர் சங்கீதா, 35. இவரது கணவர் பழனி, 47.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை புழல் பகுதியில் தனியாக வசித்து வந்த கணவர் பழனி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.
இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்த, சங்கீதா நேற்று, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றினர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பிரிந்த வாழ்ந்த தம்பதியர் அடுத்தடுத்த நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.