அறிவியல் ஆயிரம்
பேட்டரி விமானம்
பேட்டரியில் இயங்கும் சிறிய ரக விமானத்தை, ஆஸ்திரேலியாவின் டோவ்டெய்ல் எலக்ட்ரிக் விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியது. எலக்ட்ரிக் மோட்டார், லித்தியம் பேட்டரியை பயன்படுத்தி சிறிதளவு பெட்ரோலுடன் இயங்கும் வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது உரிய அனுமதி கிடைத்ததும் 2024ல் சோதனை முறையில் இயக்கப்படும். விமானத்தை எலக்ட்ரிக் மோட்டாருக்கு மாற்றும்போது, விமானம் இயக்குவதற்கான செலவில் 40 சதவீதம் குறையும். எதிர்காலத்தில் விமான துறையில் இது புரட்சியை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
உலக தொண்டு நிறுவன தினம்
அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜீ.ஓ.,) பணிகளை பாராட்டும் வகையிலும், அவை நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும் பிப். 27ல் உலக தொண்டு நிறுவன தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 89 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் என்.ஜீ.ஓ., ஈடுபடுகிறது. இது தவிர போர் பாதிப்பு, இயற்கை பேரிடர், தொற்றுநோய் காலங்களில் இவரது பணி மகத்தானது. உலகளவில் 1 கோடி என்.ஜி.ஓ., க்களும், அமெரிக்காவில் 15 லட்சம், இந்தியாவில் 20 லட்சம் என்.ஜி.ஓ., க்களும் செயல்படுகின்றன.