கோவை:சிங்காநல்லுார் செல்லாண்டியம்மன் கோவிலில் நடந்த நுாறாவது கிருத்திகை சொற்பொழிவில் அறுபடை வீடுகள் எனும் நுால் வெளியிடப்பட்டது.
கோவில் வளாகத்தில், 100வது கிருத்திகை சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று மாலை 6:30 மணிக்கு துவங்கியது.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஆறுபடை வீடுகள் என்ற நுால் வெளியிடப்பட்டது. நுாலாசிரியர் நாராயணசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
முருகப்பெருமானும், அடியார்களும் என்ற தலைப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் முருகேசன் சொற்பொழிவு ஆற்றினார்.
ஆசிரியை லதா, புலவர்கள் அங்குசாமி, ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செல்லாண்டியம்மன் சேவா சங்கம் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.