சென்னை : சென்னை பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே உள்ள மேம்பால பாதையில், பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில், இன்று கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படாது
ம.பி., இந்துார் - கொச்சுவேலி விரைவு ரயில், இன்று கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படாது
கேரள மாநிலம், பாலக்காடு - சென்னை சென்ட்ரல் ரயில், நாளை மாற்றுப்பாதை வழியாக திண்டுக்கல், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்கிறது. இதனால், சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படாது
ஈரோடு - சென்னை சென்ட்ரல் இரவு 9:00 மணி ரயில் வரும், 29ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்
கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரலுக்கான, இரவு 10:40 மணி ரயில், 29ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்
கேரள மாநிலம், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில், மார்ச், 2ல் பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரலுக்கு வராது
கேரள மாநிலம், கொச்சுவேலி - கோர்பா வாராந்திர ரயில் மார்ச் 2ல், பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக இயக்குவதால், சென்னை சென்ட்ரலுக்கு வராது.