பந்தலுார்:பந்தலுார்- கோழிக்கோடு சாலையில், மேங்கோரேஞ்ச் தபால் நிலையம் எதிரில் விழும் நிலையில் இருந்த மரங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் வெட்டப்பட்டன.
வெட்டப்பட்ட மரங்கள் துண்டுகளாக்கப்பட்டு சாலை ஓர பகுதியில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் தெருவிளக்குகள் ஏதும் இல்லாத நிலையில், இரவு நேரங்களில் வளைவில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் முன் மரத்துண்டுகளை அகற்ற வேண்டும்.