அவிநாசி:அவிநாசி, ராயம்பாளையத்தில் ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா, பொட்டு சாமி பொங்கலுடன் துவங்கியது.தொடர்ந்து காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், அபிஷேக பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற்று வந்தது. தினந்தோறும் இரவு பெண்கள் கலந்து கொண்ட கும்மியாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். வரும் மார்ச் 2ம் தேதி அம்மன் அழைத்தல், விளக்கு மாவு எடுத்து வருதல், பூவோடு எடுத்தல், கரகம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன; வரும் 3ம் தேதி மஞ்சள் நீர் விழா, அபிஷேக ஆராதனைகளுடன் நிறைவு பெறுகிறது. பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய கலைகளில் ஒன்றான கம்பத்தாட்டம் நடந்தது. ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வாத்தியங்களுக்கு ஏற்ப கம்பத்தை சுற்றி ஆடினர். ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.