நெல்லிக்குப்பம் : முன் விரோதம் காரணமாக, அரிவாளால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்தார்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர், 63 வயது மூதாட்டி. கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். மூதாட்டிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாபு மகன் தண்டபாணி, 40, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த, 22ம் தேதி நள்ளிரவு, மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற தண்டபாணி, மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி, கூச்சல் போட்டதால், ஆத்திரமடைந்த தண்டபாணி, மூதாட்டியின் தலையில் அரிவாளால் வெட்டி தப்பியோடினார்.
அருகில் இருந்தவர்கள் தண்டபாணியை பிடித்து, நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில், 'ஜிப்மர்' மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நெல்லிக்குப்பம் போலீசார் தண்டபாணியை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் தண்டபாணி மீது கொலை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.