பழைய பாக்கியுடன் மகளிர் உதவித்தொகை! அண்ணாமலை வலியுறுத்தல்

Updated : பிப் 27, 2023 | Added : பிப் 27, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
போத்தனுார்: ''ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும், பழைய பாக்கியுடன் உதவித்தொகை வழங்க முதல்வர் முன்வர வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவை, நவக்கரை அருகே மாவுத்தம்பதியில், மாற்று கட்சியினர், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர், ஆடிட்டர்கள், கிராமிய கலை குழுவினர் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:ஈரோடு
பழைய பாக்கியுடன் மகளிர் உதவித்தொகை! அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போத்தனுார்: ''ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும், பழைய பாக்கியுடன் உதவித்தொகை வழங்க முதல்வர் முன்வர வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை, நவக்கரை அருகே மாவுத்தம்பதியில், மாற்று கட்சியினர், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர், ஆடிட்டர்கள், கிராமிய கலை குழுவினர் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க, தலைமை தேர்தல் கமிஷன் தலையிட்டால், 'மாநில சுயாட்சி போய்விட்டது' என்கின்றனர். மாநில தேர்தல் கமிஷன் சரியில்லை என்றால், 'அண்ணாமலை புகார் செய்கிறார்' என, கூறுகின்றனர்.


சரிபட்டு வராதுஆளும் கட்சியே பரிசுகளை அள்ளி வழங்கி ஊழல் செய்கிறது. ஒவ்வொரு வாக்காளருக்கும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர். இது போல செலவு செய்யப்படும் பணம் எங்கிருந்து வருகிறது?

தற்போது தேர்தலை நிறுத்தினால், ஆறு மாதம் கழித்து மீண்டும் தேர்தல் நடக்கும். அப்போதும், இது போல நடக்காது என, உறுதி கூற முடியுமா? இதனால், 'தமிழக அரசியல் சரிபட்டு வராது' என, நல்லவர்கள் ஒதுங்குகின்றனர்.

மக்கள் பிரநிதித்துவ சட்டத்தை மாற்ற, அனைத்து எம்.பி.,க்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், ஒரு பிரிவு ஒத்துழைக்காது. பணம் கொடுத்தால், ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாதவாறு செய்ய வேண்டும்.

மக்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், ஒரு புதிய ஆள் கூட அரசியலுக்கு வர மாட்டார். இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவது கடினம். சீமானை போல என்னையும் பேச வைத்து விட்டனர்.

தமிழகத்தின், 38 எம்.பி.,க்கள் நான்காண்டுகளில் என்ன கொண்டு வந்தனர். தேர்தல் களத்தில் வைத்து, பெண்களுக்கான உதவித்தொகையை முதல்வர் அறிவித்திருப்பது, பயத்தில் என்றே நினைக்கிறேன்.


மாற்றம்இது வரவேற்கத்தக்கது என்றாலும். சொன்ன இடம், விதம் தவறு. ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பழைய பாக்கியுடன் இத்தொகையை வழங்க முதல்வர் முன்வர வேண்டும். மாற்றம் கொடுக்க அரசியலுக்கு வந்தவன் நான்.

வரும், 2026ல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, கூறி விட்டோம். சினிமா போல, அரசியலிலும் உதயநிதி நடிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
27-பிப்-202314:09:51 IST Report Abuse
venugopal s மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 ல் முடிக்கப்படும் என்று தான் பாஜகவினர் கூறுகின்றனரே தவிர இன்னும் ஏன் தொடங்கவில்லை என்று கூற மாட்டேன் என்கிறார்கள்?
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
27-பிப்-202311:11:45 IST Report Abuse
ramesh பழைய பாக்கி என்றால் நீங்கள் தருவதாக சொன்ன பழைய பாக்கி பதினைந்து லட்சத்தை நாட்டு மக்கள் வங்கி கணக்கிஇல் உடனே வரவு வையுங்கள் அதற்கான தரவேண்டிய பழைய வட்டியுடன் சேர்த்து
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
27-பிப்-202308:45:11 IST Report Abuse
TRUBOAT மத்தியில் நீங்கள் எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் நிலையை வெளியிட முடியுமா.... இவர் வாய் சொல்லில் வெத்து வீரர்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X