ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனியார் நர்சிங் கல்லுாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி கார்த்திகாஜோதி 19, நேற்று தனியார் மருத்துவமனையில் இறந்தார். தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. பழையபட்டி மாணவி கார்த்திகாஜோதி 19, கல்லுாரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி., நர்சிங் முதலாமாண்டு படித்தார். அவருடன் 3 மாணவிகள் தங்கினர். பிப்., 21 காலை 9:00 மணிக்கு கல்லுாரி 3வது மாடியிலிருந்து குதித்து கார்த்திகாஜோதி தற்கொலைக்கு முயன்றார்.
ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையறிந்த மாணவி உறவினர்கள் மாணவி முகத்தை கூட காட்டாமல் திண்டுக்கல் கொண்டு சென்று விட்டதாகவும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உறவினர்களை திண்டுக்கல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.