சேலம் : சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த செலவடையில் நேற்று முன்தினம், 'பைக்'குகள் மீது லாரி மோதியதில், நான்கு பேர் பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
லாரி டிரைவரான அரியலுாரைச் சேர்ந்த காட்டுராஜா, 31, 'குடி' போதையில் ஓட்டி வந்ததால் விபத்து நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜலகண்டாபுரம் போலீசார் அவரை கைது செய்தனர்.
அதிவேகமாக, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், உயிரிழப்பு ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்படுமென போலீசார் தெரிவித்தனர்.