தூதரை நடனமாட வைத்த 'நாட்டு நாட்டு' பாடல்

Added : பிப் 27, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: ஆர்.ஆர்.ஆர்., என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 'நாட்டு, நாட்டு' பாடலுக்கு, புதுடில்லியில் உள்ள தென்கொரிய துாதரகத்தில் துாதரும், அலுவலக ஊழியர்களும் நடனமாடிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர்., படம் உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று, வசூலை வாரி குவித்துள்ளது.
RRR, South Korean Ambassador,Naatu Naatu song, ஆர்ஆர்ஆர், தெலுங்கு,நாட்டு நாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஆர்.ஆர்.ஆர்., என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 'நாட்டு, நாட்டு' பாடலுக்கு, புதுடில்லியில் உள்ள தென்கொரிய துாதரகத்தில் துாதரும், அலுவலக ஊழியர்களும் நடனமாடிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர்., படம் உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று, வசூலை வாரி குவித்துள்ளது. இதில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., நடித்துள்ளனர். இப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மேலும், இப்படத்திற்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தின் சார்பில் நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாடலுக்கு இசையமைத்ததற்காக பிரபல இசையமைப்பாளர் கீரவானிக்கு, 'கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், பல விருதுகளை குவித்து வரும் இப்படத்தின் 'நாட்டு நாட்டு...' பாடலுக்கு, புதுடில்லியில் உள்ள தென் கொரிய துாதரக ஊழியர்கள் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதில் தென் கொரிய துாதர் சாங் ஜே போக் மற்றும் துாதரக ஊழியர்கள் இணைந்து நடனமாடிஉள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

g.s,rajan - chennai ,இந்தியா
27-பிப்-202317:33:11 IST Report Abuse
g.s,rajan இது நம்ம நாட்டு பாணி ...
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
27-பிப்-202307:47:36 IST Report Abuse
சீனி கொரிய பாப் இசை உலகெங்கும் பாராட்டு பெற்றும் வரும் நிலையில், அவர்களும் இந்திய இசைக்கு ஆடியதற்க்கு, கொரிய தூதருக்கும், தூதரகத்துக்கும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-பிப்-202306:14:32 IST Report Abuse
D.Ambujavalli மனதைக்கவரும் இசையும், நல்ல தாளகதியும் இருந்தால் மொழி பற்றிய கவலை இன்றி எவரையும் ஆட வைக்கும் என்பதற்கு இந்த நடனமே சான்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X