வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆர்.ஆர்.ஆர்., என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 'நாட்டு, நாட்டு' பாடலுக்கு, புதுடில்லியில் உள்ள தென்கொரிய துாதரகத்தில் துாதரும், அலுவலக ஊழியர்களும் நடனமாடிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர்., படம் உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று, வசூலை வாரி குவித்துள்ளது. இதில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., நடித்துள்ளனர். இப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மேலும், இப்படத்திற்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தின் சார்பில் நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாடலுக்கு இசையமைத்ததற்காக பிரபல இசையமைப்பாளர் கீரவானிக்கு, 'கோல்டன் குளோப்' விருது கிடைத்துள்ளது.
![]()
|
இந்நிலையில், பல விருதுகளை குவித்து வரும் இப்படத்தின் 'நாட்டு நாட்டு...' பாடலுக்கு, புதுடில்லியில் உள்ள தென் கொரிய துாதரக ஊழியர்கள் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதில் தென் கொரிய துாதர் சாங் ஜே போக் மற்றும் துாதரக ஊழியர்கள் இணைந்து நடனமாடிஉள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.