புதுச்சேரி : புதுவை தமிழ்சங்கம் சார்பில், உலகத் தாய்மொழி நாள் விழா, மாணவிகளுக்கு பரிசளிப்பு, திருவள்ளுவர் சிலைக்கு மேடை படிக்கட்டு திறப்பு என முப்பெரும் விழா நடந்தது.
சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர் ஆதிகேசவன், பாலசுப்ரமணியன், பொருளாளர் திருநாவுக்கரசு, துணை செயலர் அருள்செல்வம் முன்னிலை வகித்தனர்.
செல்வகணபதி எம்.பி., திருவள்ளுவர் சிலை படிக்கட்டை திறந்து வைத்தார். அருங்காட்சியக இயக்குனர் அறிவன், 'மொழியும்-தாய்மொழியும்' என்ற தலைப்பில் பேசினார். முதனமை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு பாராட்டுரை வழங்கினார். கல்வியாளர் நித்தியானந்தன், ஆசிரியர் எட்வர்டு சார்லசு, தொழிலதிபர் ராமகிருஷ்ணன், சபரிநாதன், செல்வமணிகண்டன், மஞ்சு, மார்சயா, பார்கவி, லத்திகா, சிபானா செரீன், அமலாவதி, அக்சயா பீவி, அபிதா, துர்கா, தேவி, ரஞ்சினி, ஜெயஸ்ரீ ஆகியோருக்கு தமிழ்சங்க விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், கந்தகுமார், தினகரன், கணேசுபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்சிக்குழு உறுப்பினர் சிவேந்திரன் நன்றி கூறினார்.