அரியாங்குப்பம், : பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணியளவில் தேரோட்டம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
இரவு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
விழாவில் சபாநாயகர் செல்வம், எம்.பி., செல்வகணபதி, சங்கர், குமுதன் உட்பட ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பூரணாங்குப்பம் வழியாக செல்லும் வாகனங்களை மாற்று வழியில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட்டனர்.
ஏற்பாடுகளை தேவஸ்தான குழுவினர் செய்திருந்தனர்.
Advertisement