ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி மற்றும் பொதுநல அமைப்பினர் சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். நகர வர்த்தக நல சங்க தலைவர் சிவானந்தம், லயன்ஸ் கிளப் தலைவர் சோலையப்பன்,ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் வீரவேல் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அனைவரும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
இதில் நகரின் பொதுநல அமைப்பினர், வர்த்தக நல சங்க மாவட்ட துணை தலைவர் ரவி, இணை செயலாளர் பூவராகமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.