புதுச்சேரி, : புதுச்சேரி செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி 6ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி., வரவேற்றார். பள்ளி முதல்வர் மீனாட்சி ஆண்டறிக்கை வாசித்தார்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர்.
பள்ளி முதன்மை முதல்வர் பத்மா வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற ஆர்த்திக்கு தங்க நாணயம் பரிசு மற்றும் அறிவியல் கண்காட்சி மற்றும் இலக்கிய மன்ற விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர் தேன்மொழி நன்றி கூறினார்.