வாலாஜாபாத், வாலாஜாபாத் - தென்னேரி - சுங்குவார்சத்திரம் சாலையில், தென்னேரி போக்கு கால்வாய் உள்ளது.
தென்னேரி ஏரி நிரம்பினால், கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீர், போக்கு கால்வாய் வழியாக, பல மாத கணக்கில் செல்லும். இதுபோன்ற நேரங்களில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
இதைத் தவிர்க்க, இருவழிச் சாலை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தும் போது, கட்டவாக்கம் - மஞ்சமேடு இடையே, உயர் மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு, வாகன பயன்பாட்டில் உள்ளது.
இதன் உயர் மட்ட பாலத்தின் இரு புறமும், சாலை ஓரம் எச்சரிக்கை பலகை இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தென்னேரி போக்கு கால்வாய் ஓரம் இருபுறமும் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.