கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில், மாரடைப்பால் உயிரிழந்த திருநாவலுார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு போலீசார் சார்பில் எஸ்.பி., நிதியுதவி வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஆசைத்தம்பி, கடந்த ஜன., 12ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆசைத்தம்பியின் குடும்பத்திற்கு, கடந்த 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்று சேர்ந்து, காக்கும் கரங்கள் என்ற பெயரில் குழு அமைத்து நிதி திரட்டினர்.
பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் போலீசார் பங்களிப்புடன் ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 500- நிதி திரட்டப்பட்டது.
இந்த தொகையினை கள்ளக்குறிச்சி எஸ்.பி., மோகன்ராஜ், உயிரிழந்த ஆசைத்தம்பியின் மனைவி பூஞ்சோலையிடம் வழங்கி, ஆறுதல் கூறினார். அப்போது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராமர், பாலசுப்ரமணியன், ரவி, சோலை, கோவிந்தன், கோவிந்தராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.