கர்கோன் : மத்திய பிரதேசத்தில் திருமண விருந்து சாப்பிட்ட, 43 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள கர்கோன் மாவட்டத்தின் ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உணவருந்திய பின், பழச்சாறு அருந்தியுள்ளனர். இவர்களில் 43 பேர் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிகிச்சை பெற்ற பெரும்பாலானவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், முதற்கட்ட சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.