அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் படகு குழாமில் இரண்டு நாட்களில் ரூ. 12 லட்சம் வருவாய் கிடைத்தது.
புதுச்சேரியில், நோணாங்குப்பம் படகு குழாம் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது.
இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்கின்றனர்.
விடுமுறை தினங்களான நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரு நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு குழாமிற்கு வந்தனர். இதன் மூலம் படகு குழாமிற்கு இரண்டு நாட்களில் ரூ. 12 லட்சம் வருவாய் கிடைத்தது.