ஆர்.கே.பேட்டை--ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், பாரம்பரிய நாட்டு மிளகாய்களை தங்களின் வயல்களின் ஒரு பகுதியில் நடவு செய்து வருகின்றனர்.
இதிலிருந்து கிடைக்கும் காய்களை தங்களின் தேவைக்கும், எஞ்சியதை விற்பனைக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
நாட்டு மிளகாய்களின் காரம் தரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகையில் நடவு செய்யப்பட்ட மிளகாய் செடிகளில் தற்போது காய்கள் பழுத்து சிவந்துள்ளன.
விரைவில் முதல்கட்ட காய் பறிப்பு மேற்கொள்ளப்படும். மொத்தம் மூன்று கட்டமாக பறிக்கப்படும் மிளகாய்களில், இரண்டாம் கட்டமாக பறிக்கப்படும் மிளகாய்கள், மிகவும் தரமானவையாக இருக்கும்.
இவற்றை தங்களின் அனுபவத்தில் கணித்து வாங்கும் பொதுமக்கள், அடுத்த ஓராண்டு தேவைக்கு இவற்றை பதப்படுத்தி பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.