கடலுார், : வேப்பூர் அருகே 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமைக் காவலர்கள் முருகானந்தம், ராஜா ஆகியோர் நேற்று வேப்பூர் அடுத்த அடரி களத்துார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினி டெம்போவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், 50 கிலோ வீதம் மொத்தம் 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக டிரைவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்துாரைச் சேர்ந்த செல்வமணி, 31; வேப்பூர் அடுத்த அடுத்த ஜாய் ஏந்தல் பகுதியைச் சேர்ந்த சேகர், 51; ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குறைந்த விலைக்கு பொது மக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி மாட்டு தீவனத்திற்கு கடத்தி வந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, அரிசி மூட்டைகள், மினிடெம்போவை பறிமுதல் செய்தனர்.