நடுவீரப்பட்டு, :முத்துமாரியம்மன் கோவிலில் திருப்பணிக்கான பரிகார பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாச நாதர் மற்றும் முத்துமாரி யம்மன் கோவில் கும்பாபி ஷேகம் நடந்து 12 ஆண்டு கள் முடிந்து விட்டது.இதனால் திருப்பணி வேலைகளை செய்திட நிர்வாகக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த திருவிழாவும் நடக்காத தால் பரிகார பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திருப்பணிக்கான பரிகார பூஜை நேற்று முன்தினம் மதியம் ஆரம்பிக்கப்பட்டது. பரிகார பூஜைகளை கேரளா நம்பூதிரிகள் நேற்று முன்தினம் மதியம் ஆரம்பித்து சிறப்பு ஹோம பூஜைகளை செய்தனர். நேற்றும் பூஜைகள் நடந்தது.
அதனை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பூஜையில் ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், முன்னாள் அறங்காவலர் ராஜாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.