மைசூரு-நஞ்சன்கூடின், ஸ்ரீகண்டேஸ்வர சுவாமி கோவில் உண்டியலில், 1.27 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
மைசூரின், நஞ்சன்கூடில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வர சுவாமி கோவில், தென் காசி என அழைக்கப்படுகிறது.
அதிக வருவாய் கொண்ட, கர்நாடக ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
கோவிலின் 33 உண்டியல்கள், நேற்று திறந்து எண்ணப்பட்டன. 1 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 782 ரூபாய் ரொக்கம், 91.5 கிராம் தங்கம், 3.750 கிலோ வெள்ளி பொருட்கள், 163 அமெரிக்கடாலர்கள், 23 ஹாங்காங் கரன்சிகள் காணிக்கையாக வந்துள்ளன.