காங்கிரஸ் கட்சியில் தேர்தல் 'சீட்' பெற யுத்தமே நடக்கிறது. 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் கடும் போட்டியில் உள்ளனர்.
இவர்களில் யாருக்கு 'சீட்' தருவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவது சவாலாக உள்ளது. இவர்களை மேலிடம் எப்படி சமாதானப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இது, சித்தராமையா, சிவகுமார் இடையே பனிப்போரை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
இரண்டு தரப்பு சீட் எதிர்பார்ப்பாளர்களும் இப்போதே தொகுதியில் தங்கள் பலத்தை காட்ட துவங்கி உள்ளனர்.
சமதானப்படுத்த வேண்டிய சித்தராமையா, சிவகுமார் ஆகிய இருவரும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இரு தலைவர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சிக்கிறது.
இரண்டு பொது வேட்பாளர்கள் இருக்கும் தொகுதிகளில் பிப்ரவரி மாதத்திற்குள் பேச்சை முடிக்க மேலிடம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இதில் இன்னும் 50 சதவீதம் அளவுக்கு கூட முடிவடையவில்லை.
அதோடு தற்போதுள்ள அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் 'சீட்' கொடுப்பதா இல்லையா என இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இதனால் தான் காங்கிரசின் சில எம்.எல்.ஏ.,க்கள், பஸ் யாத்திரையின் போது பலத்தை காட்ட முடிவு செய்துள்ளனர்.
- நமது நிருபர் -