ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், இன்று(பிப்.,27) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்நிலையில் கல்லு பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள அரசு பள்ளியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது ஓட்டை பதிவு செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டி: தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் விறுவிறுப்பாக ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.