தாரமங்கலம்: பா.ஜ.,வின், சேலம் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட, 3 ஒன்றிய மண்டல பொறுப்பாளர் கூட்டம், தாரமங்கலம் அருகே மேட்டுமாரனுாரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுதிர் முருகன் தலைமை வகித்தார். அதில், தாரமங்கலம், ஓமலுார், காடையாம்பட்டி ஒன்றியங்களின், மண்டல பொறுப்பாளர்களுக்கு, கிராமம், நகரங்களில் கள ஆய்வு செய்ய, தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் குமார் பயிற்சி அளித்தார். தொடர்ந்து மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், பொறுப்பாளர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தலில், தி.மு.க., அதிகார துஷ்பிரயோகம் செய்து அமைச்சர்களை அங்கேயே முகாமிடச்செய்து அட்டூழியங்களை செய்கின்றனர். அங்கு ஒரு முகாமில் நடந்த உண்மை சம்பவத்தை படம் எடுத்த பத்திரிகையாளரை, தி.மு.க., நிர்வாகிகள் தாக்கினர். இதுபோன்ற செயல்களை, அதிகாரிகள், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்காததால் தேர்தல் நடக்கும் நிலை உள்ளது. இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றாலும் அது ஜனநாயகத்துக்கு விரோதமான வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, 10 பேர், பா.ஜ.,வில் இணைந்தனர்.