சேலம்: சேலம், குகை, நெய் மண்டி அருணாசலம் தெருவில் துளுவ வேளாளர் சமூக அறக்கட்டளை சார்பில் அங்குள்ள துவக்கப்பள்ளி கட்டட வளாகத்தில் முழு உடல் பரிசோதனை இலவச முகாம் நேற்று நடந்தது.
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லுாரியுடன் இணைந்து நடத்திய முகாமுக்கு, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை முதன்மை டிரஸ்டி வைத்திலிங்கம், முகாமை தொடங்கி வைத்தார்.
கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவ நிபுணர்கள் பாலாஜி, ராஜாராம் தலைமையில் மருத்துவ வல்லுனர்கள், செவிலியர்கள் என, 35 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நுரையீரல் பாதிப்பு, இருதயம், நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் கண்டறிதல், ஈ.சி.ஜி., இ.என்.டி., உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம், 360 பேர் பயனடைந்தனர்.