தங்கவயல்--ராபர்ட்சன்பேட்டை, கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலின் பிரம்மோற்சாவம் நாளை துவங்கி, மார்ச் 13 வரை நடக்கிறது.
கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டில், நாளை துவஜரோஹனம், அங்குரார்ப்பணம், ஷிபிக வாகன உற்சவத்துடன் விழா துவங்குகிறது.
தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 11ம் தேதி நடக்கும் ௫௦௦ டன் எடையிலான புஷ்ப பல்லக்கு, பலவகை பூக்களால் அலங்கரிக்கப்படும்.
நுாற்றுக்கும் மேற்பட்டோர் பல்லக்கை துாக்கி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பிரம்மோற்சவ நிறைவு நாளான 13ம் தேதி தங்கத் தேர் உலா வரும். பிரபல கலைஞர்களின் இசைக் கச்சேரியும் நடக்கிறது.