பல்லடம்:பல்லடம், வடுகபாளையம்புதுாரை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரத்தில், விவசாயிக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
கோர்ட் உத்தரவின்படி, நேற்று ஒருதரப்பினர், நிலத்தில் வேலி அமைக்க வந்தனர். மற்றொரு தரப்பினர் இதை தடுக்க முயற்சிப்பர் என்று கருதி,டி.எஸ்.பி., சவுமியா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ.,க்கள் என, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு விசாரணை வரும் வரை நிலத்துக்குள் யாரையும் நுழைய விட மாட்டோம் என்று விவசாயி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தாசில்தார் நந்தகோபால் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் துவங்கின. இதனால், வடுகபாளையம்புதுாரில் பரபரப்பு நிலவியது.